தெனியாய என்சல்வத்த பகுதியில் தோட்ட காவலாளி ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தோட்ட முகாமையாளரால் இன்று அதிகாலை முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தோட்ட காவல் நிலையத்திற்குள்ளேயே கொலை செய்யப்பட்டவரின் சடலம் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
என்சல்வத்த தோட்டத்தை சேர்ந்த 54 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.தெனியாய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

