கிளிநொச்சி பொலிஸார் மூா்க்கத்தனமான தாக்குதல்!





கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட மூா்க்கத்தனமான தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பொன்னகர் மத்தி முதலாம் கட்டைப் பகுதியை சோ்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமையா இராசேந்திரன் (வயது 31) எனும் நபரே தலையிலும், கையிலும், காலிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று அதிகாலை 01.30 மணியளவில் மாடு பார்க்கச் சென்ற போதே சிவில் உடையில் வந்த பொலிஸார்  தன்மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டதாக படுகாயமடைந்தவர் குறிப்பிடுகின்றனர்.
குறித்த நபரின் வீட்டில் இருந்து 50 மீற்றா் தொலைவில் வைத்தே பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்தவரை பொலிஸாரே கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்தோடு இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில் குறித்த நபருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக அவரது மனைவி கருத்து தெரிவிக்கையில்,
மாடு பார்க்க சென்ற கணவனின் குரல் கேட்டு தானும் கிராம மக்களும் 3.40 வரைக்கும் தேடியதாகவும் காலையிலேயே கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாகவும் தனது கணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இருப்பது தனது வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாகவும் கண்ணீருடன் கூறினார்.
இது தொடா்பில் கிளிநொச்சி பொலிஸாரின் கருத்தை பெற முயற்சித்த போது அவா்களிடம் இருந்து முழுமையாக தகவல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.