பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை





முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.ஏ ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது