
-ஹுஸைன் -
நாட்டிலுள்ள தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கங்களின் வேண்டுகோளுக்கமைவாக அச்சங்கங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் திங்களன்று (28.12.2015) பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு வருமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு (ஆinளைவசல ழக யேவழையெட Pழடiஉநைள யனெ நுஉழழெஅiஉ யுககயசைள) அமைச்சு அழைப்பு விடுத்துள்ளதாக தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் கிழக்கு மாகாணப் பிரதிநிதி கே. சதீஸ் தெரிவித்தார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் நாட்டிலுள்ள தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டிலுள்ள தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கங்களின் வேண்டுகோளுக்கமைவாக தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்குத் தக்க தீர்வைக் காணும் பொருட்டு, பிரதம மந்திரியின் செயலாளர் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினால் அமைச்சுக்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்கள் உட்பட இன்னோரன்ன நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்கள் குறித்து விவரம் திரட்டப்பட்டுள்ளது.
ஆகையினால், அந்தக் குழுவின் உறுப்பினர்களும் நாட்டிலுள்ள தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இணைந்த கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்களன்று (28.12.2015) பிரதம மந்திரியின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த சந்திப்பில் நாட்டிலுள்ள தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் சங்கப் பிரதிநிதிகளைக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கப்ப பிரதிநிதிகள் கடந்த நொவெம்பெர் 18 ஆம் திகதி பிரதம மந்திரியைச் சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1400 பட்டதாரிகள் வேலையற்றிருப்பதாகவும் இவர்களில் 55 பேர் 35 வயதைக் கடந்தவர்கள் என்றும் அந்த மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் யூ. உதயவேந்தன் தெரிவித்தார்.
அபோன்று அம்பாறை மாவட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த சுமார் 2052 பேர் வேலையற்றவர்களாக இருப்பதாகவும் இவர்களில் 48 பேர் 35 வயதைக் கடந்தவர்கள் என்றும் அந்த மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எம். திலீபன் தெரிவித்தார்
