ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது - விமானங்கள் பயணிக்கும்






(பின்னினணப்பு)
சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட ஆர்பாட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 

இதன்படி அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி தமது பயணத்தை ஆரம்பிக்கும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. 



கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்கள் இன்று தாமதமாகலாம் என கூறப்பட்டது 

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 

இதன்படி சிங்கப்பூர், லண்டன், பீஜிங், லாகூர் நோக்கிச் செல்லும் விமானங்களே இவ்வாறு தாமதமாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் தமக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பரிசோதனைகளை மேற்கொள்ளவதாக கூறியே, சுங்கப் பிரிவினர் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். 

தமது பைகள் மற்றும் உணவுப் பொதிகள் கூட இவ்வாறு பரிசோதிக்கப்படுவதால், சேவையைத் தொடர்வதில் அசௌகரியங்கள் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

எனவே தாம் காலை 10.00 மணி தொடக்கம் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் 50 உத்தியோகத்தர்கள் வரை ஈடுபட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.