நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் தோட்டம் மிட்போர்ட் பிரிவில் 11.12.2015 அன்று காலை “தாமரை” என்ற சிறுவர் முன்பள்ளி பாடசாலைக்கு பின்புறமாக உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படும் சிறுத்தை குட்டி ஒன்றை பார்க்க சென்றவர்களில் ஒருவர் மீது சிறுத்தை பாய்ந்து காயப்படுத்தியதால் கோபம் கொண்ட தொழிலாளர்கள் சிறுத்தையை தாக்கி உயிரிழக்க செய்துள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டத்தின் சிறுவர் முன்பள்ளி மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிறுத்தை காணப்பட்டதாகவும் இதனூடாக உயிர் சேதங்கள் ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே இம்மக்கள் இச்சிறுத்தையை உயிரிழக்க செய்துள்ளனர்.
உயிரிழந்த நிலையில் காணப்படும் சிறுத்தையை வன மிருகங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் சிறுத்தையினால் தாக்கப்பட்ட ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையும் மேலும் குறிப்பிடதக்கது.
குறித்த தோட்டப்பகுதிகளில் கடந்த காலங்களில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதாகவும் இதனால் உயிர் அச்சத்துடன் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றர் என்பது தொடர்பாக பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த இந்நிலையில் 11.12.2015 அன்று இச்சம்பவத்தில் சிறுத்தையை உயிரிழக்க செய்தமை மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தினாலேயே என்பதை பொலிஸாருக்கு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

