பிரசாந்தன் மற்றும் சகோதரன் ஹரன் ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு





-ஹுஸைன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ரீஎம்விபி. செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினருமான பூபாலப்பிள்ளை - பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான பூபாலப்பிள்ளை ஹரன் ஆகியோருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம்  திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு  நீதவான்; நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இவர்கள் இருவரையும்  பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி ஏ.எம். றியாழ் இந்த விளக்க மறியல் நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்தார்.
2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி லப்பிள்ளை பூபபிரசாந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரது சகோதரனான ஹரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.