சமூக முறையில் காணப்படும் அடிப்படைகளே பிரச்சினைகளுக்கு காரணம் - அனுரகுமார திஸாநாயக்க

அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டம் காரணமாக இருக்க முடியாது. சமூக முறையில் காணப்படும் அடிப்படை காரணங்களினால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பில் நாட்டு மக்களின் நீதி, நியாயம், சுதந்திரம் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு தற்போது 1978ம் ஆண்டு அரசியலமப்புச் சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த அரசியலமைப்புச் சட்டம் 37 ஆண்டுகள் பழமையானது. இதனால், அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது பலத்தை அதிகரித்து கொள்ளவே இந்த திருத்தங்களை கொண்டு வந்தனர். 

19 மற்றும் 17ம் திருத்தச் சட்டங்களை தவிர ஏனைய அனைத்து திருத்தச் சட்டங்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களின் தேவைக்கு அமைய கொண்டு வரப்பட்டவை. இதனால், இந்த அரசியலமைப்புச் சட்டம் திரிபடைந்து போயுள்ளது. இதன் காரணமாக புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டமே காரணம் என அரசாங்கத்தில் உள்ள சிலர் எடுத்துக்காட்ட முயற்சித்து வருகின்றனர். இந்த நாடகத்திற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

சில பிரச்சினைகளுக்கு அரசியலைமைப்புச் சட்டம் காரணமாக இருக்கலாம் ஆனால், அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டம் காரணமாக இருக்க முடியாது. சமூக முறையில் காணப்படும் அடிப்படை காரணங்களினால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதன் மூலம் மாத்திரம் விவசாயிகள், இளைஞர்களின் வேலையில்லா திட்டாட்டம், மீனவர்களின் பிரச்சினை, பிள்ளைகளின் கல்விப் பிரச்சினை, வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.

எனினும் தயாரிக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நாங்கள் கட்சி என்ற வகையில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தயாரிப்பானது நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பில் உள்ள சட்டங்கள் மற்றும் பந்திகளில் காணப்படும் குறைப்பாடுகளுக்கு அமைய ஏற்பட்ட பிரச்சினைகள் அல்ல.

அரசியலமைப்பில் உள்ள சட்டங்களையும் பந்திகளில் குறிப்பிட்டுள்ளவைகளையும் சரியாக அமுல்படுத்தது பிரதான பிரச்சினையாக உள்ளது.

19வது அரசியலமைப்புச் சட்டத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது. எனினும் அதனை மீறி தற்போது 45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 48 பிரதியமைச்சர்களும், 45 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர். எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.