காலி முகக் கடலில் குளித்தவரும் காப்பாற்றிவரும் உயிரிழப்பு



காலி முகக் கடற்கரையில் நேற்று மாலையில் குளித்து கொண்டிருந்த வேளை கடலில் மூழ்கிய மாளிகாவத்தையை சேர்ந்த மொஹமட் அர்ஷாட் (16) என்பவரை காப்பாற்ற சென்ற மாளிகாவத்தையை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை மொஹமட் உமர் (சமீர்) என்பவரும் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிளந்துள்ளனர்.
இருவரும் மாளிகாவத்தை தோட்டத்தில் வசிப்பவர்கள்.நேற்று ஞாயிற்று கிழமை குடும்பமாக சென்றிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
16 வயதுடைய மொஹமட் அர்ஷாட் இம்முறை GCE.O/L எழுதும் மாணவன், கொழும்பு அல்-ஹிதாய வித்தியாலயத்தில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.