ஒரு வருடத்தின் பின்னர்...



ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்ச்சி BMICHஇல் இடம்பெற்றது.
நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி அவர்களுடனும், சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு  அற்புதமான உரையொன்றை நிகழ்த்திய மகாத்மா காந்தியின் பேரர் கோபாலகிருஷ்ண காந்தியுடனும் எடுத்த படங்கள்.
(கோபாலகிருஷ்ண காந்தியுடன் சிராஐ் மசூர்)

ஆங்கிலத்தில் உரையாற்றிய காந்தி, அடிக்கொரு தடவை தமிழ் வார்த்தைகளைப் பேசி சபையோரை அசத்தினார்.
இன்னொரு நிகழ்வு அதே 08.01.2016 அன்று கோட்டே நாக விகாரையில் நடந்தது. ஆட்சி மாற்றத்தில் சோபித தேரரின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதியும் இதில் பங்கேற்றார்.
சோபித தேரரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நாக விகாரைக்கு சென்றதற்குப் பிறகு, இப்போது மீண்டும் ஒரு தடவை நாக விகாரைக்குச் சென்றபோது பல எண்ண அலைகள் மனதுள் தோன்றி மறைந்தன. ஒரு வகையில் சோபித தேரரின் பங்களிப்பு குறித்து மகிழ்ச்சியாகவும் இருந்தது.
கூடவே, சமூக நீதிக்கான போராட்டம் குறித்த கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி வழிநடாத்தும் சிவில் சமூக சக்திகளின் பலவீனம் நம் நாட்டுக்கு ஒரு பெரும் பின்னடைவுதான்