சுவீடன் பெண்ணொருவர் இலங்கையில் கடலில் பலி



தங்காலை, மாரகொள்ளிய பிரதேச கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந்தப் பிரதேச சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த அந்தப் பெண் கடலில் நீராடிக் கொண்டிருந்த அலைகளுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சுவீடன் நாட்டை சேர்ந்த 80 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.