முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கடந்த மூன்று வருடங்களாக சொத்துக்கள் விவரங்களை பிரகடனம் செய்யாமையை எதிர்த்தே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் பத்தாயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை ஒன்று மற்றும் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

