ஊழலைக் குறைத்தல் மூலமாகவும் முதலீடுகளை ஈர்ப்பதாலும் நீண்டகால நிரந்தர அபிவிருத்தியை இலங்கை இலகுவாக எட்ட முடியும் என பிரித்தானிய வெளிவிவகார நடவடிக்கைகள் மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஹியூகர் ஸ்வயர் தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஹியூகர் ஸ்வயர், பிரித்தானிய வர்த்தக சபை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டிருந்தார்.
இதன்போதே அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.

