இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் தற்போது அயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ளார்.
தான் விளையாடிய காலப்பகுதியில் தன்னுடைய இடது கை வேகப்பந்து வீச்சால் பல துடுப்பாட்ட வீரர்களுக்கும் இவர் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
இலங்கை அணிக்காக 355 டெஸ்ட் விக்கெட்களையும், 400 ஒருநாள் விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்தவர். இவர் தனது ஓய்விற்குப்பின் 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றினார். அதன்பின் 2013 ஆம் ஆண்டில் இருந்த கடந்த ஆண்டு வரை இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார்.
இந்தியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டியை முன்னிட்டே இவர் அயர்லாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.