ஏம்.கே.டி.எஸ். குணவர்தனவின் இடத்திற்கு போட்டி அதிகரிப்பு!
காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க அல்லது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் மத்திய மாகான சபை உறுப்பினர் அஸாத் சாலி ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஆசனமொன்றின் ஊடாக எம்.கே.டி.எஸ். குணவர்தன பாராளுமன்றிற்கு தெரிவாகியிருந்தார். இந்நிலையில் முறைப்படி தனக்கே அந்த இடம் கிடைக்க வேண்டும் என மத்திய மாகான சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, ரோசி சேனாநாயக்க, உபுல் சாந்த சன்னஸ்கல மற்றும் 30 வயதான ஐ.தே.க. இளைஞர் முன்னணியின் தவிசாளரும், பணிப்பாளருமான சட்டத்தரணி எரந்த வெலியங்க ஆகியோரின் பெயர்கள்களும் இதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
ஐ.தே.க கட்சியன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் கொள்கைக்கு அமைய தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல அனுமதிக்க முடியாது என அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே ரோசி சேனாநாயக்க, சரத் பொன்சேகா மற்றும் உபுல் சாந்த ஆகியோருக்கு இந்த வாய்ப்பு சாத்தியமில்லை என்றும் அதனால் அஸாத் சாலி அல்லது எரந்த வெலியங்க ஆகியோருக்கு வாய்ப்பு அதிகம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் தேசியப்படடியல் மீனைப் போல் ஆகிவிட்டது.
மொத்தத்தில் தேசியப்படடியல் மீனைப் போல் ஆகிவிட்டது.

