இந்திய வௌிவிவகார செயலாளர் இலங்கை வருகிறார்



இந்திய வௌிவிவகார செயலாளர் எஸ். ஜயசங்கர் இலங்கைக்கு வருகை தர இருப்பதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 12ம் திகதி அவர் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

அவர் அன்றைய தினம் காலை மாலைத் தீவில் இருந்து இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வகீஸ்வர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்திய வௌிவிவகார செயலாளரின் இந்த விஜயத்தின் போது யாழ் நகரிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை மக்களிடம் கைளயளிக்க உள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன