ஏஞ்சலோ மேத்யூஸ் (FCID) யிற்கு அழைக்கப்பட்டுள்ளார்



இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு (FCID) யிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குசல் ஜனித் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரை மெச் பிக்ஸிங் இல் ஈடுபடுத்த முயற்சி செய்தார் என்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவே அவர் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.
அதற்கமைய எதிர்வரும் திங்கட் கிழமை ஏஞ்சலோ மேத்யூஸ் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
அதேவேளை இலங்கை கிரிகெட் அணியின் முகாமையாளருக்கும் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க குசல் ஜனித் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் கடந்த 12ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு முன்னிலையில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.