19 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 29 அரசியல்வாதிகளுக்கு எதிராக FCID விசாரணை



19 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகள் 29 பேருக்கு எதிராக பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்று சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.