இன்று 3வதுநாளில் 500பேருக்கு சிகிச்சை






காரைதீவு  நிருபர் சகா


இந்திய வைத்தியநிபுணர்களின் பங்குபற்றுதலுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் காதுமூக்குதொண்டை வைத்தியமுகாமின் மூன்றாவது நாளான  இன்று புதன்கிழமை  500பேருக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இருநாட்களில்  44பேருக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றது..

இன்றும் நாளையும் தொடர்ந்து சத்திரசிகிச்சை நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மேற்படி அபயவங்களில் பிரச்சினை உள்ளவர்கள் எதிர்வரும் 3தினங்களுக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குவந்து தேவையான சிகிச்சையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளமுடியுமென முகாம் இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.