பெண்கள் இன்றையசமுதாயத்தின் சுமைதாங்கிகள்!



கல்முனைபொலிஸ்நிலையப்
பொறுப்பதிகாரி கப்பார் 

(காரைதீவு  நிருபர் சகா)

'ஒரு குடும்பத்திலும் சரி சமுதாயத்திலும் சரி பெண்கள்தான் ஆணிவேராகச் செயற்படுகின்றாள். அவர்கள் வலுப்படுத்தவேண்டும். பெண்கள்தான் இன்றைய சமுதாயத்தின் சுமைதாங்கிகள்'
இவ்வாறு கல்முனை சேனைக்குடியிருப்பு சேவோ அமைப்பு நடாத்திய சர்வதேச மகளிர்தினவிழாவில் உரையாற்றிய கல்முனை பொலிஸ்நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல் கப்பார் குறிப்பிட்டார்.

சேவோ அமைப்பின் மகளிர்தினவிழா அதன் பணிப்பாளர் தேசமான்ய கந்தையா சத்தியநாதன் தலைமையில் ஞாயிறன்று மாலை சேவோ தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் சிறப்பம்சமாக கல்முனைப்பிராந்தியத்தில் மனித உரிமைகளை மதித்து சட்டம்ஒழுங்கை இனமதபேதமின்றி சிறப்பாக நடைமுறைப்படுத்திவரும் கல்முனை பொலிஸ்நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல் கபார் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் 20பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பாக நிதி வழங்கப்பட்டது.
அங்கு சி.ஜ.பி. கபார் மேலும் உரையாற்றுகையில்:
அன்று கூட்டுக்குடும்பமாக நாம் வாழ்ந்த காலத்தில் எமது பிள்ளைகளுக்கு அத்தனைபேரும் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் இன்று அது கருக்குடும்பமாக மாறியதனால் எமது பிள்ளைகளுக்கு நாம் மட்டுமே பாதுகாப்பாக இருக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை எழுந்துள்ளது. அது காலத்தின் கோலம்.
உலகின் சனத்தொகையில் பெண்களின் சதவீதம் 50வீதத்தையும் தாண்டிவிட்டது.சகலதுறைகளிலும் இன்று பெண்கள் சிறப்பாக செயற்பட்டுவருகின்றனர். எனினும் அவர்கள் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும்.
அன்று கணவனுக்கு எதிராக மனவியோ மனைவிக்கு எதிராக கணவனோ நீதிமன்றில் சாட்சியமளிக்கமுடியாது. அந்தளவிற்கு குடும்பப்பிணைப்பு மிக உன்னதமான மதிப்போடு இருந்தது.
இன்று வீட்டுவன்முறை என்ற போர்வையில் அச்சாட்சியங்களை ஏற்பதற்கு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.அந்தளவிற்கு குடும்பக் கட்டமைப்பும் மாறியிருக்கிறது.
இன்று பாடசாலைக்கூட்டமோ பிரதேசசெயரலககூட்டமோ எந்தக்கூட்டமாக இருந்தாலும் சரி அங்கு பெண்களே அதிகம் சமுகமளித்திருப்பர். ஏன் பொலிஸ் நிலையங்களுக்குக்கூட பெண்குளெ அதிகம் வருகின்றனர்.
பெண்களின் பொறுமையை மென்மையை ஆண்கள் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.அவ்வளவுதான். இந்த சேவோ அமைப்பு உண்மையாக பெண்களின் வலுவூட்டலில் ஈடுபட்டுவருவதைஅறிவேன்.
2013 இல் கல்முனைக்கு பொலிஸ் பொறுப்பதிகாரியாக வந்தேன். அன்று இருந்த கற்பழிப்பு பெண்கள் துஸ்பிரயோகம் வன்முறை என்பன இன்று 99வீதம் குறைந்துள்ளன. அதற்கு மக்களும் ஒருகாரணம். என்றார்.
பிரதம அதிதியாககலந்துசிறப்பித்த கல்முனை தமிழ்பிரதேச செயலக பிரதேசசெயலாளர் கே.லவநாதன் உரையாற்றுகையில்:
எனது பிரிவிற்குள் 5பெரும் கிராமங்கள் வருகின்றன. அதில் ஒப்பீட்டளவில் பின்தங்கிய பிரதேசமாக சேனைக்குடியிருப்பு உள்ளது. அத்தகைய பிரதேசத்தில் சேவோ நிறுவனம் அமைந்து பன்னெடுங்காலமாக சேவையாற்றிவருவதென்பது மாபெரும் சமுகவேவையாகும்.
எனது பிரிவில் பிதிவுசெய்யப்பட்ட 49 சேவை அமைப்புகளில் தமது நோக்கத்தை திறம்பட நிறைவேற்றிவரும் ஒரேயொரு அமைப்பும் சேவோ அமைப்புத்தான் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
பெண்கள் ஆண்களில் தங்கிவாழும் நிலை ஒழிக்கப்படும்போதுதான் உண்மையான வலுவூட்டல் நிகழும் என்பது எனது அபிப்பிராயம் என்றார்.
சிறப்புஅதிதிகளாக காரைதீவுபிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி உதவிக்கல்விப்பணிபப்hளர் வி.ரி.சகாதேவராஜாபிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன்  ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

பெருந்தொகையான மகளிர் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.