கல்முனையில் தௌஹீத் ஜமாஅத் பிரமுகர் இருவருக்கு பிணை. இருவர் விளக்க மறியலில்




தௌஹீத் ஜமாஅத் பிரமுகர்கள் இருவருக்கு இன்று பிணை.இருவர் விளக்கமறியலில் 


காரைதீவு நிருபர் சகா


கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரை  பிரதேசத்தில் சட்டவிரோதமாக பொலிஸ் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன் படுத்தி பிரச்சாரக் கூட்டம் நடாத்தியதை  கல்முனை பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் ஒலிபெருக்கி சாதனங்களையும் பறிமுதல் செய்து  நீதி மன்றில் முன்னிலைப் படுத்தினர் . 



இதேவேளை இன்றைய தினம் இதில் சம்மந்தப்பட்தாக சந்தேகிக்கப்படும் இருவருக்கு பிணை இன்று வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்  ஆஜர்படுத்தப்பட்  மேலும் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.