வட்டவளை தோட்ட ஆலயத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ அடிக்கல் நாட்டினார்



(க.கிஷாந்தன்)

வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 06.03.2016 அன்று நடைபெற்றது.

முன்னால் விளையாட்டுதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பீ.ரத்நாயக்க, திலும் அமுணுகம மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.