ஜனசட்டனவில் இணைந்து கொண்டார் மஹிந்த



கூட்டு எதிர்க்கட்சியின் ஜனசட்டனவில் தற்போது இணைந்துள்ளார் மஹிந்த ராஜபக்ச. இன்றைய தினம் நிகழ்வில் இணைந்து கொள்பவர்களே உண்மையான சு.க விசுவாசிகள் என தெரிவித்திருந்த அவர் கட்சி விதிகளையும் மீறி நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள 'ஜன சட்டன' பொதுக்கூட்டம் ஹைட் பார்க்கில் ஆரம்பமானது. சுகயீனம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதியாகி உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் சற்றுமுன்னர் 'ஜன சட்டன' பொதுக்கூட்ட மேடையில் ஏறி ஆதரவாளர்களுக்கு கையசைத்ததாக தெரிவித்தனர்.