சிறைகளில் இருந்து பாதாள உலக குழுக்களை நடாத்தும் குற்றவாளிகளுக்கு உதவி செய்யும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் தீர்மானித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளை ஒரே இடத்தில் வேலைக்கு அமர்த்தாமல் சிறைச்சாலைகளிலிருந்து சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு சில குற்றவாளிகள் பாதாள உலக கும்பல்களை இயக்குவதாக சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறான கும்பல்களுக்கு உதவியளிக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

