விபுலானந்தாவில் கணிதபாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை:
பெற்றோர்கள் விசனம்: க.பொ.த.சாத.பெறுபேறு பாதிக்கப்படும் அபாயம்!
(காரைதீவு நிருபர் சகா)
பெற்றோர்கள் விசனம்: க.பொ.த.சாத.பெறுபேறு பாதிக்கப்படும் அபாயம்!
(காரைதீவு நிருபர் சகா)
கல்முனை வலயத்தின்கீழ்வரும் காரைதீவுக் கோட்டத்திலுள்ள ஒரேயொரு 1ஏபி பாடசாலையான காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் கடந்த 08 மாதகாலமாக கணிதபாட ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்கள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தரம்6 முதல் தரம் 11 வரையுள்ள வகுப்புகளுக்கு இரு கணித ஆசிரியர்கள் தேவை.
ஏலவேயிருந்த இருகணித ஆசிரியர்களில் ஒருவர் கடந்த வருடம் 7ஆம் மாதம் ஓய்வில் செல்ல மற்றவர் பதவியுயர்வு பெற்று ஜனவரியில் வேறு பதவிக்குசென்றுள்ளார். இவ்விரு இடங்களுக்கும் இதுவரை யாரும் நிரந்தரமாக நியமிக்கப்படாமையினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கல்லூரி அதிபர் தி.வித்தியராஜனிடம் கேட்டபோது:
இரு ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புமாறு நாம் எழுத்துமூலம் கல்விஅலுவலகத்தை கோரியுள்ளோம். இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
அதற்கிடையில் தற்காலிக ஏற்பாடாக நாம் க.பொ.த.உயர்தரம் கற்பிக்கும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் சிலரை இவ் வகுப்புகளுக்கு பயன்படுத்திவருகின்றோம்.அவர்களு
அவர் மேலும் தெரிவிக்கையில் :
எமக்கு இரு கணித பாடஆசிரியர்களுக்கும் ஒரு ஆங்கில பாட ஆசிரியருக்கும் தகவல்தொழினுட்பபாட ஆசிரியருக்கும் உயர்தரத்தில் விவசாயபாட ஆசிரியருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டுமென்று கேட்டுள்ளோம் என்றார்.
காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பரதன்கந்தசாமியிடம் கேட்டபோது அங்குள்ள ஆசிரியர்தட்டுப்பாட்டு நிலைமையை அறிவேன். இதுபற்றி உயரதிகாரிகளுக்கு தெரியவித்துள்ளேன் என்றார்.
பெற்றார் ஒருவர் கருத்துத்தெரிவிக்கையில்:
கணிதபாட ஆசிரியர் 3மாதகாலமாகியும் இன்னும் நியமிக்கப்படவில்லை என்றசெய்தி வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. க.பொ.த. சாதாரண தரத்தைப்பொறுத்தவரை கணிதமும் தமிழும் எத்தகைய முக்கியத்துவத்தைப்பெறுகின்தென்
இன்னும் பரீட்சைக்கு 08மாதங்கள் இருக்கின்ற நிலையில் கடந்த 3மாதகாலமாக கணிதபாடத்திற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படாதது குறித்து எமது விசனத்தை தெரிவிக்கின்றோம்.
கணிதபாட கற்றல் கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளது. முழுமுச்சாக கற்றலில் ஈடுபடவேண்டிய காலகட்டத்தில் இப்படி ஆசிரியர்கள் இல்லாமலிருப்பது கணிதபாட அடைவில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தலாமெனக் கருதுகின்றோம்.
பாடசாலை அபிவிருத்திச்சபையினர் மற்றும் பழையமாணவர் அமைப்பினர் இதுவிடயத்தில் கவனம் செலுத்துவார்களா? என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து மாணவர்க்கான கல்விஉரிமையை வழங்கவேண்டும். இன்றேல் ஏனைய பாடசாலைகளில் நடப்பதைப்போன்று பெற்றோர் மாணவர் வீதியிலிறங்க நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதனை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.என்றா

