பட்டாசு தொழிற்சாலையில் தீயில் மூவர் இறப்பு



நீர்கொழும்பு கிம்புலாப்பிட்டிய பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் 11.20 அளவில் இந்த தொழிற்சாலையில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயினால் காயங்களுக்குள்ளான மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.