மின்சார சபைத் தலைவர் ராஜினாமா



இன்று மாலை 2-30 முதல் இரவு 10 மணிவரை நாடு தழுவிய ரீதியில் மின் துண்டிக்கப்பட்டிருந்தது. பியகம மின்மாற்றி பொருத்தப்பட்ட நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
ஆறு மாத காலப்பகுதிக்குள் மூன்று தடவைகள் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமைக்கான பொறுப்பை ஏற்று, தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவந்த பின்னர், தமது இராஜினாமா கடித்த்தை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அனுர விஜேபால குறிப்பிட்டுள்ளார்.