இ.தொ.காவின் மகளிர் தின விழா ஒத்திவைப்பு



(க.கிஷாந்தன்)

வணக்கத்துக்குரிய அஸ்கிரிய மஹாநாயக கலகம ஸ்ரீ அத்ததாஸி தேரரின் திடீர் மறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் தமது ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக் கொள்வதாக தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்ததோடு எதிர்வரும் 13.03.2016 ஞாயிற்றுக் கிழமை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தியுள்ளமையைக் கருத்திற்கொண்டு சர்வதேச மகளிர் தின விழாவினை ஒத்திவைக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின்  பனிப்புரைக்கமைய இத்தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மகளிர் தின நிகழ்வு நடாத்தப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது