நான்கு ஏக்கர் கொண்ட வனப்பகுதியில் தீ



(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வளாகப்பகுதியில் காணப்பட்ட நான்கு ஏக்கர் கொண்ட வனப்பகுதி திடீர் தீ விபத்துக்குள்ளாகி சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் 22.03.2016 அன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

இதனையடுத்து இந்த தீ விபத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர திம்புள்ள பத்தனை பொலிஸாரின் உதவியை கொண்டு செயல்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.