மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட கீதம் உயிரின் வாசம் வெளியீடு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென உயிரின் வாசம் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட மாவட்ட கீதம் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் மாவட்ட கீதம் அடங்கிய இறுவட்டினை வெளியிட்டு வைத்தார்.
மட்டக்களப்பின் இயற்கை வளங்கள், கலைகள், தொழில், பண்பாட்டு விடயங்கள் பலவற்றின் காட்சிகளுடன் இது வெளியிடப்பட்டுள்ளது.
ஒலி ஒளி வடிவமாக வெளியிடப்பட்டுள்ள இந்த மாவட்ட கீதத்திற்கு சதீஸ்குமார் என்ற கவிஞர் வரிகளை எழுதியுள்ளார். சஞ்சித் லக்ஸ்மன் இசையமைப்பில் பிரதீப் என்ற பாடகர் பாடல்களைப்; பாடியுள்ளார்.
நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், காணிப் பிரிவுக்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெயானந்தி திருச்செல்வம், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரி. ஜயசிங்கம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்றைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர், மாவட்டச் செயலாளர் எஸ். ரங்கநாதன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் அரச உத்தியோகத்தர்கள், கலைத்துறை சார்ந்தோர், தொழில்நுட்ப, ஊடகத்துறையினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.