நொபல் பரிசு பெற்ற தவக்குல் கர்மான் இலங்கையில்








தவக்குல் கர்மான் (Tawakul Karman[1] (அரபு மொழி: توكل كرمان), ஓர் யேமன் பெண் அரசியல்வாதி ஆவார். கர்மன் யேமனின் முதன்மை எதிர்கட்சியான அல்-இசுலாவின் மூத்த அங்கத்தினராவார்.இவர் 2005ஆம் ஆண்டு சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக மனித உரிமை மீறல்களை கண்டித்து வருகிறார்

எல்லன் ஜான்சன் சர்லீஃப் மற்றும் லேமா குபோவீயோடு இணைந்து கர்மனுக்கும் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

நொபல் பரிசு பெற்ற தவக்குல் அப்துல் சலாம் காலித் கர்மான் இலங்கை வருகின்றார்.பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் உரிமைக்கென வன்முறையற்ற போராட்டத்தின் மூலமாக சமாதானத்துக்குப பங்களிப்புச் செய்த யெமன் நாட்டுப் பிரஜையான இவர், 2011 ம் ஆண்டில் நொபல் பரிசு பெற்றவர் இவர்.முதல் அரபுப் பெண்மணி என்பதுடன், இரண்டாவது முஸ்லிம் பெண்மணியும் 2011ம் ஆண்டுவரை மிகக் குறைந்த வயதில் 2011ம் ஆண்டு வரை  நொபல் பரிசு பெற்ற பெண்மணியாவரா்.


கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள ஆயிஸா சீத்தீக்கா பெண்கள் கற்றகை நிலைய 3 வது பட்டமணிப்பு விழாவில் பிரதம விருந்தினராக இவர் பங்கேற்கின்றார்.