T20 உலகக்கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
காயம் காரணமாக போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது