WCT 20: இந்திய அணிக்குப் படுதோல்வி.விளாசித் தள்ளிய நியுசிலாந்து



நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி தமது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.1 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 34 ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை அணியின் தலைவர் தோனி அடித்தார்.