சிவராமின் 11 ஆவது நினைவு,இன்று: யாழ், நாளை அக்கரைப்பற்றில்



ஊட­க­வி­ய­லாளர் தர்­ம­ரத்­தினம் சிவ­ராம் (தராகி) கொல்­லப்­பட்டு இன்­றுடன் ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. தர்­ம­ரத்தினம் சிவராம்,  2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்தார். மறு­நா­ளான ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய நாடா­ளு­மன்­றக்கு கட்­ட­டத்­துக்கு அருகில் அவர் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

சிவ­ராமின் 11ஆவது ஞாப­கார்த்த நினைவு தினம் நாளை சனிக்­கி­ழமை பிற்­பகல் மூன்று மணிக்கு அக்­க­ரைப்­பற்று விபு­லா­னந்தா சிறுவர் இல்ல மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. அம்­பாறை மாவட்ட தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றி­யத்­தி­னதும் கிழக்கு மாகாண ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றி­யத்­தி­னதும் ஏற்­பாட்டில் இந்த நினை­வு­தின நிகழ்வு நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது, ‘சிவ­ராமின் பார்­வையில் எமது ஊட­கமும் அர­சி­யலும் நிரப்­பப்­பட வேண்­டிய இடை­வெளி’ என்ற தலைப்பில் மட்­டக்­க­ளப்பு ஆசி­ரிய கலா­சாலை விரி­வு­ரை­யாளர் கல்­வி­யி­ய­லாளர் கலா­நிதி எம்.பி.ரவிச்­சந்­திரா உரை­யாற்­ற­வுள்ளார்.இந்த நிகழ்வில் ஊடக நண்­பர்கள், அர­சி­யல்­வா­திகள், சமூக ஆர்­வ­லர்கள் உட்­பட  பலரும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

தர்­ம­ரட்ணம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்தார். மறு­நா­ளான ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய நாடா­ளு­மன்­றக்கு கட்­ட­டத்­துக்கு அருகில் அவர் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

யாழ்ப்­பா­ணத்தில்...

இதே­வேளை, ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக உயிர் கொடுத்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிற்­கான பொது நினைவு நாள் நினை­வேந்­தலும் அமரர் தராகி சிவராம் 11 ஆவது ஆண்டு நினைவு நாளும் இன்று 29 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. பிற்­பகல் 03.00 மணிக்கு யாழ்ப்­பாணம் பிர­தான வீதியில் அமைக்­கப்­பட்­டுள்ள  மறைந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் நினைவு தூபி பகு­தி­யில் படு­கொ­லை­யான ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஊட­கப்­ப­ணி­யா­ளர்­க­ளிற்­கான நினைவு சுட­ரேற்­றலும் மலர் அஞ்­ச­லியும் இடம்­பெ­ற­வுள்­ளது.

தொடர்ந்து பிற்­பகல் 03.30 பொது­நூ­லக மண்­ட­பத்தில் நினைவு உரைகள் மற்றும் உன்­ன­த­மான ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக உயிர் கொடுத்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிற்­கான பொது நினைவு நாள் நினை­வேந்தல் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு என்­பவை வெளி­டப்­ப­ட­வுள்­ளது.

நினை­வு­ரை­களை கலா­நிதி ரகுராம், நிலாந்தன், முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஜெயா­னந்த மூர்த்தி, பாசன, சந்தேசிய பண்டார ஜோதிலிங்கம் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற் றும் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் தெற்கு அமைப்புக்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.