மீண்டும் கொழும்பு வருவதற்கு 6,000 பஸ்கள்



தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்கு மீண்டும் செல்வதற்காக மேலதிக பஸ் சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இன்று முதல் சுமார் 6,000 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்துவதாக போக்குவரத்து சபையின் பிதிப் பொது முகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்துள்ளார்.
எத்ரிவரும் 19 ஆம் திகதி வரை இந்த மேலதிக போக்குவரத்து சேவையை நடைமுறைப் படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சொந்த இடங்களுக்கு சென்ற பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட புகையிரத சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.