அமெரிக்க அறிக்கைக்கு பதிலளிக்க இராணுவம் கால அவகாசம் கோரல்



உலக நாடுகளிலுள்ள மனித உரிமை நிலவரங்களை ஆய்வு செய்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் உத்தியோகபுர்வமாக பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவை என இராணுவம் அறிவித்துள்ளது.
இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்த போதிலும் கடந்த வருடத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் பல இலங்கையிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்வாறான நடவடிக்கைகளில், துன்புறுத்தல், கடத்தல், பாலியல் வன்முறை என 11 விடயங்கள் அடங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.