சிறுநீரக கடத்தல் – இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினைக் கடிதங்கள் மீட்பு



சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளிடமிருந்து இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதுடன்
இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் என்பன சந்தேகநபர்களிடம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆவணங்களின் உண்மை தன்மை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
இதேவேளை குறித்த நபர்களில் 6 பேரின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டமை உறுதி செய்யப்படுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்