அரசியலமைப்பு சபையின் தீர்மானத்தை ஜனாதிபதி மறுக்க முடியாது எனவும் ஏற்கனவே 17 ஆவது யாப்புச் சீர்திருத்தத்தில் வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரம் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மேனக ஹரன்கஹ தெரிவித்துள்ளார்.
புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு ஜனாதிபதி தலையீடு செய்யலாமா என்பது தொடர்பில் அவரிடம் வினவப்பட்ட போதே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தெரிவுக்காக உறுப்பினர்களை தெரிவு செய்து அரசியலமைப்பு சபைக்கு வழங்கும் அதிகாரம் மாத்திரமே ஜனாதிபதிக்குள்ளது. பின்னர் அரசியலமைப்பு சபை தீர்மானம் எடுக்கும். அரசியலமைப்புச் சபை தெரிவு செய்ததன் பின்னர் ஜனாதிபதி உத்தியோகபுர்வமான அவரை அறிவிக்கவே முடியும். தெரிவுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ, மாற்றுவதற்கோ ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையெனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

