மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளில் சரத் பொன்சேகாவின் அதிகாரி: கூட்டு எதிர்க்கட்சி



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள வயதான முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு வழங்கும் பிரிவு அதிகாரிகளில் அமைச்சர் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய இராணுவத்தினர் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இதேவேளை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாவகச்சேரி பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் சம்பந்தமாக பாதுகாப்புச் செயலாளரின் கருத்து பொறுப்பற்றது என கூறியுள்ளார்.