பூஜித் ஜயசுந்தரவிற்கு பொலிஸ் தலைமையகத்தில் வரவேற்பு



புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மா அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் போது உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றச்செயல்களோ வன்செயல்களோ அற்ற நிலையில் அனைவரும் வாழக்கூடிய அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதே இலங்கை பொலிஸின் குறிக்கோள் என தெரிவித்ததுடன் மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்வது பொலிஸாரது கடமை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பொலி்ஸ்மா அதிபர் சர்வ மதப்பிரார்த்தனைகளிலும் பங்கேற்றார்.