மன்னாருக்கு நாளை நீர் வெட்டு



மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில், நாளை (25) காலை 8 மணி தொடக்கம் 12 மணித்தியாலங்களுக்கான நீர் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலுள்ள நீர்தாங்கி கோபுரங்களுக்கான புதிய நீர் குழாய்களை பொருத்தும் நடவடிக்கை காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும், முருங்கன் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் நாளை நீர் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
நீர் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதால் , நீரை இயலுமானவரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நுகர்வோரிடம் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.