'அதிகளவு நீதிபதிகளை நியமியுங்கள்': இந்திய தலைமை நீதிபதி உருக்கம்



இந்தியாவில் அதிக அளவில் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று நாட்டின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்திய நீதிமன்றங்களில் 30 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை தீர்ப்பதற்கு எப்படி 21ஆயிரம் நீதிபதிகளால் முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் உரையாற்றும்போது அவர் வினவினார்.
இந்தக் கேள்வியை எழுப்பி அவர் உரையாற்றும்போது அவர் கண்ணீர் சிந்தும் அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டார்.
வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையும் சிறையில் வாடுபவர்களையும் நாட்டின் வளர்ச்சியையும் மனதில்வைத்து, நீதித்துறையில் பிரதமர் மோடி மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதி தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சனையை அரசு தீவிரமாக கவனத்தில் எடுத்து தீர்வு காண முயலும் என்று பிரதமர் அவருக்கு பதிலளித்துள்ளார்.