பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய என்.கே. இலங்ககோன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கருத்து முரண்பாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு அழைப்பு விடுக்காமையினால் இந்த கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பொலிஸ் அதிகாரிகளை அழைக்கும் பொறுப்பு தேர்தல்கள் மற்றும் நிருவாகத்துறைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுக்கு சகல பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், காலி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.எஸ். குணவர்தனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வில்லை.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவுக்கு முறைப்பாடு செய்த போது இந்த கருத்து முரண்பாடு அவரின் தலையீட்டினால் சமாதானப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
