102ஐ இழந்தாலும் சந்தோசமடைகின்றேன் மஹிந்த



இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக காவல்துறை விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியிலேயே, தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் எவருக்கும் இனிமேல் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.


கொடூர பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட தலைவருக்கான இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது அவரது உயிருக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் செயல் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.