நாளை மீண்டுமுள்ளது வாக்கெடுப்புக் கச்சேரி



55 மில்லியன் ரூபாவுக்கான அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த பிரேரணைக்கு சாதகமாகவும் எதிராகவும் தலா 31 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 

முன்னதாக இந்தப் பிரேரணை 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

எனினும் சிலரால் கணக்கெடுப்பு தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து, மீள வாக்குகள் எண்ணப்பட்ட வேளை சமநிலையில் முடிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

எனவே இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

(முந்திய செய்தி)
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் நிதியாண்டின் 55 மில்லியன் ரூபா மதிப்பீட்டுத் தொகைக்கான வாக்கெடுப்பில் அரசாங்கம் 2 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டுத் தொகை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுர குமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படி, வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு சார்பாக 33 வாக்குகளும், எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்கெடுப்பு நடக்கும் வேளையில் அரசாங்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் சபையில் ஆஜராகியிருக்க வில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாக்கெடுப்பு நடைபெற ஆரம்பிக்கும் முன்னர் பாராளுமன்றத்தில் ஆங்காங்கே இருந்த அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து வந்து வாக்கெடுப்பில் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.