உலகில் ஆண்டுக்கு 5 கோடியே 60 லட்சம் கருக் கலைப்புக்கள்



உலக அளவில் ஆண்டுக்கு 5 கோடியே 60 லட்சம் கருக்கலைப்புக்கள் செய்யப்படுவதாக புதிய ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
உலகில் நடக்கும் ஒட்டுமொத்த கருவுறலில் சுமார் 25 சதவீத கருக்கள் இப்படி கலைக்கப்படுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
அதேசமயம் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் நடக்கும் கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு குறைந்திருப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கருத்தடுப்பு சாதனங்கள் அதிக அளவில் கிடைப்பதே இதற்குக் காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நாடுகளில் கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை பெருமளவு ஒரே அலவில் நீடிப்பதாக தெரிவித்திருக்கும் இந்த ஆய்வு, இத்தகைய நாடுகளில் கருத்தடைக்கான வசதிகள் போதுமான அளவில் கிடைக்காமையும் இதற்கான காரணம் என்றும் கூறியுள்ளது.
சர்வதேச ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கருக்கலைப்பை சட்டவிரோதமாக்குவதன் மூலம் பெண்கள் கருக்கலைப்பு செய்வதை பெரிய அளவில் தடுக்க முடிவதில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது