“ஈஜிப்ட் ஏயார்” பயணிகள் விமானம் ஒன்று 69 பேருடன் மாயம்




பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்த எகிப்திய விமானம் ஒன்று நடுவானில் வைத்து மாயமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.
குறித்த விமானத்தில் 59 பயணிகளும், 10 ஊழியர்களும் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈஜிப்ட் ஏயார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எஸ். 804 ரக விமானமே இவ்வாறு ராடர் கருவியின் தொடர்பை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கிழக்கு மெடிடரேனியன் வான் பரப்பில் சுமார் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது காணாமல் போயிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.