கடுகண்ணாவையில் மண் சரிவு, 6 பேரை காணவில்லை



கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கிய 06 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது