மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது எதிர்பார்ப்பு




2021 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்துள்ளார்.
பணந்துறை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
2021 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ சந்திரிகா குமாரதுங்கவுக்கோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என துமிந்த திசாநாயக இதன்போது தெரிவித்துள்ளார்.