வடமாகாணத்திற்கான தொழில் நியாய சபை




வடமாகாணத்திற்கான தொழில் நியாய சபையினை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு யாழில் திறந்து வைத்துள்ளார்.
நீதி, பௌத்தசாசன பிரதி அமைச்சர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி துமிந்த மித்திரபால மற்றும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் ஆகியோரது பங்குபற்றலில் நீதி, பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த தொழில் நியாய சபையினை திறந்து வைத்தார்.
இதுவரை காலமும் யாழ் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டிய தொழில் சார் வழக்குகள் யாவும் அநுராதபுரம் தொழில் நியாய சபையில் எடுத்தது நடத்தபட்டு வந்தது.
தற்போது இந்த தொழில் நியாய சபை யாழ் மாவட்ட நீதிமன்ற கட்டிட தொகுதியில் ஆரம்பிக்கபட்டுள்ளமையால் இனிவரும் காலங்களில் தொழில் சார் வழக்குகள் யாவும் இங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இக்கட்டிட தொகுதியில் மூன்றாம் மாடியில் உள்ள இந்த தொழில் நியாய சபையில் வழக்கு தொடர்ந்தவர்கள் தமக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் இரண்டாவது மாடியில் உள்ள மேல் நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும்.